Posts

Jain Buddhist

தேவாரம் - முதல் திருமுறை 1. திருப்பிரமபுரம் - நட்டபாடை 10. புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற , நெறி நில்லா ஒத்த சொல்ல , உலகம் பலி தேர்ந்து , எனது உள்ளம் கவர் கள்வன்- “ மத்தயானை மறுக , உரி போர்த்தது ஒர்மாயம் இது!” என்ன , பித்தர் போலும் , பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே! பொ-ரை: புண்ணியம் இன்மையால் புத்தர்களும் அறிவற்ற சமணர்களும் சைவத்தைப் புறங்கூறச் சான்றோர் வகுத்த நெறியில் நில்லாது , தமக்கு ஏற்புடையவாகத் தோன்றிய பிழைபட்ட கருத்துக்களைச் சொல்லித் திரிய , உலகனைத்தும் சென்று பலி தேர்ந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் , மதயானையை மருளுமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தது ஒரு மாயமான செயல் என்னுமாறு செய்து , பித்தனாய் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ! 2. திருப்புகலூர் - நட்டபாடை 21.           செய்தவத்தர் மிகு தேரர்கள் , சாக்கியர் , செப்பில் பொருள் அல்லாக் கைதவத்தர் , மொழியைத் தவிர்வார்கள் கடவுள் இடம் போலும் கொய்து பத்தர் மலரும் புனலும் கொடு தூவி , துதி செய்து , மெய் தவத்தின் முயல்வார் உயர் வானகம் எய்தும் புகலூரே. பொ-ரை: எண்